தமிழர் பகுதியில் நடைபெற்ற கலாச்சார உணவுத் திருவிழா (Video)
கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் "கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு" எனும் தொனிப்பொருளில் உணவுத் திருவழா இடம்பெற்றது.
கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் இந் நிகழ்வு இன்று (04.11.2022) நடைபெற்றுள்ளது.
உணவுத் திருவிழா
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கிராமத்தில் எளிதாக கிடைக்கக்கூடிய உணவு பண்டங்களைக் கொண்டு பல்வேறு வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இலவசமாக மக்களும், மாணவர்களும் சுவைக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அத்துடன், குறித்த உணவுகளை தயாரிக்கும் முறைகளும் செய்து காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பனம்பழம், மரவள்ளி, கச்சான், சத்துணவுகள், கடலுணவு என 10க்கு மேற்பட்ட உணவு
பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மூலப்பொருள் விடுத்தும் 10க்கு மேற்பட்ட
உணவுகள் செயல்முறையுடன் காட்சிப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.