உலகின் மாபெரும் சக்தியாக புடின்.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் பாபா வங்காவின் 2026 கணிப்பு
2026இல் இடம்பெறுமென ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் "உலகின் இறைவன்" அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய - உக்ரேனிய போர்
இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர்.

அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் இடத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றன.
சர்வதேச பரப்பில் உக்ரைன் - ரஷ்ய போர் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் விரைவில் அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாபா வங்காவின் இந்த கணிப்பு, முன்னதாக அவரின் கணிப்புக்களில் சில விடயங்கள் நிகழ்ந்துள்ளன என்பதால் நிபுணர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam