தாளையடி கடற்கரைக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள்.
அவதானம்
மற்றும் சிலர் புகைப்படங்கள் எடுப்பது கடலில் குளிப்பது நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று மற்றும் பாரியளவான கடல் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் எனவும் கடலுக்கு மிக அண்மித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அந்தப் பகுதி கடற்றொழிலாளர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



