கிரிந்த கடற்கரையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்
கிரிந்த கடற்கரையில் 350 ஐஸ் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருட்களை இன்று (12) காலை, தரைவழியாக கொண்டு செல்ல எத்தனித்த போது, மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அவற்றை கைப்பற்றியுள்ளது.
திஸ்ஸமஹாராம பகுதிக்கு கடல் வழியாக போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி ரோஹன் ஒலுகலவுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இரகசிய தகவல்
அதன்படி, இந்த தகவல் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கித்சிறி ஜெயலத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, தென் மாகாணத்தை சேர்ந்த பொலிஸ் குழுவுடன் இணைந்து, கிரிந்த ஆண்டகலவெல்ல கடற்கரையில் இன்று காலை ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன்படி, ஆழ்கடலில் இருந்து பல நாள் கடற்றொழில் படகின் மூலம் கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள் ஒரு சிறிய படகிற்கு மாற்றப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறிய படகில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள் கயிற்றின் உதவியுடன் கடலில் மிதந்து கொண்டிருந்தன. அவற்றைக் கொண்டுவரச் சென்ற 7 சந்தேகநபர்கள் கடற்கரையில் கைது செய்யப்பட்டனர்.
படகில் இருந்த 19 பைகள்
கடலில் மிதந்து கொண்டிருந்த போதைப்பொருட்கள் அடங்கிய 19 பைகள் தரையிறக்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவை சுமார் 345 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 6 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட கடற்கரையில் சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருவதாக கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam