இலங்கையர்களுக்கு நாளை முதல் தாய்லாந்து வழங்கவுள்ள வாய்ப்பு
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் (15) அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்ரைஸ்ரீ தைசரணகுல் (Traisuree Taisaranakul) தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் நாடோடிகள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சமையல், தற்காப்புக் கலைகள் போன்ற திறன்களைக் கற்க விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு டெஸ்டினேஷன் தாய்லாந்து விசாவை (DTV) அறிமுகப்படுத்துகிறது.
இந்நிலையில், தாய்லாந்திற்கு இலங்கையர்கள் காகித விசா பெறாமல் பயணம் செய்யும் முதல் தடவை இதுவாகும் என ட்ரைஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகம்
எனினும், தாய்லாந்து குடிமக்கள் ஏற்கனவே 10 அமெரிக்க டொலர் செயலாக்கக் கட்டணத்திற்கு உட்பட்டு விசா இல்லாமல் இலங்கைக்கு வருகை தரலாம்.
மேலும், தாய்லாந்தின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கை, விசா இல்லாத தங்கும் நேரத்தை 30 முதல் 60 நாட்களுக்கு நீடிக்கிறது.
இதற்கு பயணிகள் பணம், தங்குமிடம் மற்றும் திரும்புவதற்கு அல்லது முன்னோக்கிச் செல்வதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி
இந்த மாற்றம் சுற்றுலாப் பயணிகளுக்கும் குறுகிய கால வணிகப் பயணிகளுக்கும் பயனளிக்கும் என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளதோடு, ஆண்டுதோறும் சுமார் 350,000 இலங்கையர்கள் தாய்லாந்திற்கு பயணம் செய்கிறார்கள்.
குறித்த விசா 180 நாட்கள் வரை தங்க அனுமதிப்பதோடு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் டிடிவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தாய்லாந்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் தங்கி வேலை தேடவோ, பயணம் செய்யவோ அல்லது ஆராய்ச்சி நடத்தவோ அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ட்ரைஸ்ரீ தைசரணகுல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |