தாய்லாந்து - கம்போடியா போர்நிறுத்தம் நள்ளிரவு முதல் நடைமுறையில்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் இன்று நடைமுறைக்கு வருகின்றது.
கம்போடியா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக, இப்பிரச்சனைக்கு தீர்வு காண இருதரப்பு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போதும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
போர்நிறுத்தம்
இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

அவர் மலேசியாவில் இருந்து இருநாடுகளுக்கும் சமாதானம் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதன் முடிவில் கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் பொதுவான புரிதலுக்கு வந்ததாக அன்வர் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரு நாடுகளும் உடனடி மற்றும் நிபந்தனையின்றி போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன என்றும், இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam