இலங்கையில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் சர்வதேச விமான நிறுவனம்
தாய்லாந்தின் முக்கிய விமான சேவை நிறுவனமான தாய் ஏர்வேஸ் இலங்கையில் மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தல் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தாய் ஏர்வேஸ் தனது விமான சேவையை வருகின்ற ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.
அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகள் வருகை
அதேவேளை, குறித்த விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையானது, நாட்டின் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாய் ஏர்வேஸ் ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் தனது விமான சேவையை நடத்தி வருகின்றது.

மேலும், இந்த ஆண்டு பெப்ரவரி வரை இலங்கையின் விமான நிலையங்களில் 36 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தனது சேவையை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri