கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய பயணிகள் முனையத்தில் 30 புதிய புறப்படும் கவுன்டர்கள் நிறுவப்படும் என அதன் செயலாளர் ருவன்சந்திர குறிப்பிட்டார்.
பயணிகள் முனையம்
தற்போதுள்ள பயணிகள் முனையத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய பயணிகள் முனையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
கட்டுமான செலவு 2.5 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
