விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப்பேழையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்
விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தன பேழையில் நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் பொறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்ததோடு அங்கு வந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இறுதி ஊர்வலம்
தீவுத்திடலிலிருந்து நேற்று(29) மாலை தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகம் வந்த பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்து, சந்தன பேழையில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
