போராட்டத்திற்கு மத்தியிலும் சுமூகமாக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
காலி கோட்டையில் பெரும் எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் காலி கோட்டையில் பெரும் எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பயிற்சி போட்டி
கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் இன்று(09) நடைபெறவிருந்த பாகிஸ்தானின் பயிற்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, இந்த வார இறுதிப் போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்க SLC போட்டிக்குழு தீர்மானித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இந்நிலையில், அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுவதில் எவ்வித பாதிப்பும் இல்லையென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்க விடயமாகும்.



