சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்! 167 இராணுவ வீரர்கள் பலி
சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக பதுங்கியிருந்து இரண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பினரை ஒடுக்குவதற்காக சோமாலியா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மேலும் அண்டை நாடான எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் இராணுவமும் சோமாலியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ளன.
அந்த வகையில் சோமாலியாவின் மேற்கு பகுதிகளில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

எத்தியோப்பிய துருப்புக்கள் மீது தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை காலை சோமாலியாவிற்குள் எல்லையைத் தாண்டிய சிறிது நேரத்திலேயே பயங்கரவாதிகள் எத்தியோப்பிய துருப்புக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பிய இராணுவ வீரர்கள் குறித்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில்167 எத்தியோப்பிய வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் மேலும் பலரை உயிருடன் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam