பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தியது இலங்கை - பிரித்தானியாவும் கடும் கண்டனம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தடுத்து வைத்து விசாரணை செய்வதற்க அனுமதி
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் போது வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு கிடைத்துள்ளதால் அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களுகம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தூதுவர் கண்டனம்
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் இலங்கை அலுவலகம் நேற்று (22) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவலை நினைவு கூருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
