பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தினால் நாடு பாரிய சிக்கலை எதிர்நோக்கும்-ஜீ.எல்.பீரிஸ்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கலான இடத்தை நோக்கி தள்ளப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் மாத்திரமல்லாது மனித உரிமைகள் எதுவும் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு நான் சில திருத்தங்களை முன்வைத்தேன். முழு சட்டமூலமும் மீளாய்வு செய்யப்படும் வரை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவசரப்பட வேண்டாம்.
அடுத்த இரண்டு வாரங்களில் ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது. செப்டம்பர் 12 ஆம் திகதி. இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது.
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை எமது நாட்டின் ஏற்றுமதிக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், இந்த அனைத்து துறைகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.
அவசரகாலச் சட்டத்தை ஆதரிப்பதில்லை என தீர்மானித்தோம்
இந்த சட்டத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். அதேபோல் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தது.
அதற்கு ஆதரவளிப்பதில்லை என நாங்கள் தீர்மானித்தோம். அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த தேவையும் இருக்கவில்லை. இதனை விட மோசமான சட்டமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகி வருகின்றனர்.
வசந்த முதலிகே என்ற மாணவனை 90 தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவை பெற்றுக்கொண்டனர். இதில் இருக்கும் பயங்கரவாதம் என்ன?. அதில் பயங்கரவாதம் இருப்பதாக நாங்கள் காணவில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
May you like this video

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
