பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன் படுத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் இலங்கை அலுவலகம் இன்று (22) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவலை நினைவு கூருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனநாயகத்துக்குத் தடை
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையின் ஜனநாயகத்துக்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.