பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் மசோதா விரைவில்..!
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்யும் விசேட மசோதா ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் மே மாதத்தின் முதல்வார நாடாளுமன்ற அமர்வின் போது இந்த மசோதா சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம்
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகளை மீறும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக சர்வதேச ரீதியாக பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட போதும் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்தும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
