பிரான்சில் சுழற்றியடித்த சூறாவளி! கமராவில் சிக்கிய காட்சி
பிரான்சில் பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மத்திய பிரான்சிலுள்ள Creuse என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூறாவளி தாக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Impressionnante vidéo de la #tornade ayant touché le secteur de Pontarion dans le departement de la Creuse (23) vers 17h cet après-midi. Crédit: Jean-Marc Velleine, avec sa permission. pic.twitter.com/7XuonxKfrN
— Nahel Belgherze (@WxNB_) March 9, 2023
25 வருடங்களில் முதல்முறை
இதேவேளை குறித்த சூறாவளி தாக்கத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கிராம மேயர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் குறிப்பாக கரையோரப்பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
? Au passage d'un orage, une tornade a été observée ce jeudi peu avant 17h à Pontarion dans la Creuse ! Le phénomène a occasionné quelques dégâts. (© Kan'tin Penot) pic.twitter.com/3HXOT78rKt
— Météo Express (@MeteoExpress) March 9, 2023
இந்நிலையிலேயே பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன.
இப்படி ஒரு பயங்கர சூறாவளி இந்த பகுதியில் வீசுவது 25 வருடங்களில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan