ஏறாவூர் பற்று தவிசாளர் பதவியில் இழுபறி நிலை

Batticaloa Eastern Province ITAK
By Kumar Jun 02, 2025 05:40 AM GMT
Report

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

32 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 ஆசனங்களை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

வாக்கெடுப்பில் முறைகேடுகள்

இந்நிலையில் ஏற்கனவே மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர்களாக சித்தாண்டியைச் சேர்ந்த முரளி மற்றும் செங்கலடியைச் சேர்ந்த நிலாந்தன் ஆகிய இருவரும் தவிசாளர் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் .

ஏறாவூர் பற்று தவிசாளர் பதவியில் இழுபறி நிலை | Tensions Over The Post Of Eravur Thavisalar

இதில் முதல் இரண்டு வருடங்களுக்கு முரளிக்கும் பின்னால் வரும் இரண்டு வருடங்களுக்கு நிலாந்தனுக்கும் என உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் முறைகேடுகள் உள்ளது என்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெருபான்மை முரளிக்கு இல்லை என்றும் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்குமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்ட குழு நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு வருகை தந்து இது குறித்து ஆராயும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு சந்திவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், ஞா.சிறிநேசன் கல்குடா தொகுதி கிளையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான யோகேஸ்வரன் ஐயா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைய சித்தாண்டியைச் சேர்ந்த முரளியும் செங்கலடியைச் சேர்ந்த நிலாந்தனும் தவிசாளர் பதவிகளை பகிர்ந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையாக உள்ள ஏனைய கட்சிகளை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் ஆதரவை முரளியால் பெறமுடியாத சூழ்நிலை உள்ளதால் அடுத்த தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நிலாந்தனுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு இருக்குமானால் அவரை முதலில் தவிசாளராக முன் நிறுத்தி கட்சியை வெற்றி பெறச் செய்ததன் பின்னர் பின்னால் வரும் இரண்டு வருடங்களுக்கு முரளியை தவிசாளராக்கலாம் என்று கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை வழங்கியிருந்தது.

ஏறாவூர் பற்று தவிசாளர் பதவியில் இழுபறி நிலை | Tensions Over The Post Of Eravur Thavisalar

தவிசாளர்கள் யார் என்பதற்கு அப்பால் சபையில் தமிழரசுக் கட்சி தோல்வி அடையக் கூடாது என்பதில்தான் கட்சியின் உயர்மட்ட குழு கவனம் செலுத்தும் என இதன் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

எனவே ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளராக நிலாந்தனும், முரளியும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது என்பதன் அடிப்படையில் அவரை முதலில் தவிசாளராக முன் நிறுத்துவதற்கு கட்சியின் உயர்மட்ட குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் முரளி மற்றும் நிலாந்தனை தவிர கட்சி வேறு யாரையும் தவிசாளராக தெரிவு செய்யவில்லை என்றும் கட்சியின் மேற்படி தீர்மானத்திற்கு மாறாக குழப்பங்களை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபடும் என கட்சியின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

யாழில் ஆட்சியை கைப்பற்றவுள்ள தேசிய மக்கள் சக்தி : சந்திரசேகர் பகிரங்கம்

யாழில் ஆட்சியை கைப்பற்றவுள்ள தேசிய மக்கள் சக்தி : சந்திரசேகர் பகிரங்கம்

சிசுவுக்கு எமனாக மாறிய பலாப்பழம் - கர்ப்பிணித் தாயிற்கு நேர்ந்த துயரம்

சிசுவுக்கு எமனாக மாறிய பலாப்பழம் - கர்ப்பிணித் தாயிற்கு நேர்ந்த துயரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US