சிசுவுக்கு எமனாக மாறிய பலாப்பழம் - கர்ப்பிணித் தாயிற்கு நேர்ந்த துயரம்
கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி இரவு தெரணியகல, லிஹினியகல பகுதியில் வீட்டில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
இரவு 11.00 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரே இந்த துயர சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.
உயிரை பறித்த பலாப்பழம்
சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து தாயின் வயிற்றில் விழுந்துள்ளது.

வேதனை மிகுதியால் துடித்த தாயார் உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தாய் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri