வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகரித்துள்ள சிறைக்கைதிகளால் வேகமாக பரவும் நோய்!
வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகரித்துள்ள சிறைக்கைதிகளால், சிறங்கு மற்றும் அறிப்பு, உடலில் தடிப்புகள் போன்ற தோல் நோய்களில் சிறைக்கைதிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் இடநெரிசல் காரணமாக சில கைதிகளுக்கு இந்நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இவை அதிகரித்து செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சிறைச்சாலைகளில் நெரிசல்
கழிப்பறை பிரச்சினை காரணமாக இந்த சொறி,சிறங்கு நோய்கள் உருவாகியுள்ளதாகவும் கைதிகள் மேற்பூச்சு மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரான பிரசன்ன ரணவீர, சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக கழிப்பறை பிரச்சினையால் கைதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலை காரணமாக சிறையில் உள்ள கைதிகள் நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும், தோல் நோய்களில் சிறைக்கைதிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
