கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி தோல்வி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி தோல்வியில் முடிந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் 25.02.2026 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி
அகழ்வு பணி நிறுத்தம்
குறித்த அகழ்வின்போது எந்தவித தடயப்பொருட்களும் கிடைக்கப்பெறாத நிலையில், அகழ்வு பணி இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியின் போது தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர்.


மேலதிக தகவல் - தேவந்தன்
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி

இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam