கொழும்பில் வெடித்தது போராட்டம்: பல இடங்களில் பதற்றம் (VIDEO)
இரண்டாம் இணைப்பு
"இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர்த் தியாகம் செய்வதற்கும் நாம் தயார்." என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.
விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் கொழும்பில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொலிஸ் உள்ளிட்ட அரச படைகளின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும், நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் பேரணி ஆரம்பமாகி, ஹெட் பார்க் மைதானம் வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்துடனான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தால் கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டகாரங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதால், பல பகுதிகளில் இன்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு ஹைட்பார் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பொலிஸாருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகமை தொகுதி அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரமவுக்கும் (Rehan Jayawickrama )இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற தம்மை தடுத்து நிறுத்திய பொலிஸாருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கட்டாயம் வழக்கு தொடரப் போவதாக ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
மிக மோசமான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் அவர் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
