வடமராட்சி கிழக்கில் பரபரப்பு: தீக்காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில், நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (21.06.2024) இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இரவு பத்து மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, அவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் தெரியவராத போதும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம்
தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
