தந்தை ஒருவரின் கொடூர செயல்! சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட காணொளி
தனது 4 வயது மகனை கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் வைத்து நேற்று (20) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கம்பஹா தோட்டம் மேல் பிரிவு உடுபோக உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், எனினும் அவர் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால், குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, குறித்த கணவர், சமூக ஊடகம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் இந்த வீடியோவை ஏனைய சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
தாக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை, வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
