இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய உலக சுகாதார நிறுவன தலைவர்
ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் இருக்கும் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் உலக சுகாதார நிறுவன தலைவர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பெரும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.
ஏமனில் தாக்குதல் நடத்த போர் விமானங்கள் கிளம்பி சென்ற காட்சிகளை இஸ்ரேல் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் (Israel), தற்போது ஹமாஸ் ஆதரவு நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சனாவில் போராட்டம்
காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில், சுமார் 10 ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் அன்மையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு, தற்போது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் (Israel Strikes) கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலைய தாக்குதல்
இந்நிலையில், ஏமனில் உள்ள விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது விமானத்தில் ஏறவிருந்த, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் (Tedros Adhanom Ghebreyesus) நூலிழையில் உயிர்தப்பியதாக தெரிவிக்கப்படகிறது.
இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது பணி முடியும் வரை இந்த தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்படுவார்கள் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |