அமெரிக்காவில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் : விமானம் மற்றும் வங்கிச் சேவைகள் பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட, தொழில்நுட்ப மற்றும் இணைய சேவை கோளாறுகள் காரணமாக, பல முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும், விமானம், வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
விமான சேவைகள் பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல சேவைகள் பாதிக்கப்பட்டன.
மைக்ரோசாப்ட்' மென்பொருள் நிறுவனத்தின் சேவைகளில் கடந்த வாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உலகெங்கிலும் முக்கிய அலுவலக தொடர்பு செயலிகள் முடங்கின.

விமான போக்குவரத்து துறையின் தொலைத் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், நாடு முழுதும், மூன்று நாட்களுக்கு மேலாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை தயாரித்த வினாத்தாளில் மகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.. அரச பரீட்சையில் இடம்பெற்றுள்ள முறைகேடு