செர்பியா நாட்டு நாடாளுமன்றத்தில் கண்ணீர் குண்டு வீச்சு தாக்குதல்
செர்பியா(serbia) நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சியான ஆளும் கூட்டணியை (SNS) எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளிதுமளியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
U Skupštini je došlo do guranja u prostoru ispred predsednice, a tu je i dim.#Skupština pic.twitter.com/JnN28K8FUC
— Otvoreni Parlament (@O_Parlament) March 4, 2025
பதவி விலகல்
ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் பதவி விலகலை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி சபாநாயகரை நோக்கி ஓடியுள்ளனர்.
இதன்போது அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த அதிகாரிகளும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏனைய சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |