போராட்டக்களத்தில் பொலிஸாருக்கு ரோஜாப் பூ கொடுத்த இளம் யுவதி! கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் (Video)
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இளம் பெண் ஒருவர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு ரோஜா பூவொன்றைக் கொண்டு சென்று கொடுத்துள்ளார்.
மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியொன்று இன்று பிற்பகல் களனியிலிருந்து நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடைந்தது.
எனினும் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது இளம் பெண் ஒருவர் கையில் ரோஜாவுடன் பொலிஸாரை நோக்கி நடந்து சென்றார்.
அவர் குறித்த ரோஜாவை ஒரு பொலிஸ் அதிகாரியிடம் கொடுத்த நிலையில் பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக் கொண்டார்.
எவ்வாறாயினும், அதன் பின்னர் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர்.






அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
