இரண்டாம் தவணை பரீட்சை: தென் மாகாண கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு
வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை இன்று(16.10.2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடியாத பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் மாத்திரம் நிலைமை தணிந்த பின்னர் தவணை பரீட்சை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
2023ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சைக்கு 337,956 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
