அரசின் வன்முறைகளுக்கு எதிராக கண்டனம்: வடக்கில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள் (Photos)
இசுறுபாய முன்பாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
மேலும் யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை முன்றலிலும் இன்றைய தினம்(27.10.2023) ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளை கோரிய போராட்டம்
மேலும், ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின் செயல்பாடுகளை எதிர்த்து குறித்த போராட்டம் இன்று பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுபோதினி அறிக்கையின்படி சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும் மற்றும், ஆசிரியர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணத்தின் மேலும் சில பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்

சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
வவுனியா
வவுனியாவில் அனைத்து பாடசாலைக்கு முன்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி இசுறுபாயவிற்கு முன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடும் அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான அரசின் கொடூர தாக்குதலை எதிர்ப்போம், ரணில் ராஜபக்சக்களின் கேவலமான குண்டர் தாக்குதலை கண்டிப்போம், சம்பளம், சம்பள நிலைவை மீது அறவிடும் வரியை உடன் நிறுத்து ” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - திலீபன்



