யாழ்.ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Photos)
காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(27) பார்வையிட்டுள்ளார்.
குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்படுவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று காலை இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்: நாமலுக்கு சவால் விடுத்த சஜித் - செய்திகளின் தொகுப்பு
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியினால், தொழில்நுட்ப பூங்கா உட்பட 8 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணி உட்பட அடையாளப்படுத்தப்படட காணிகளை வழங்குமாறு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையை தனியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கபடவில்லை என்றே தான் நம்புவதாகவும், குறித்த மாளிககைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையிலான குழுவொன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
