நவம்பர் 30ஆம் திகதி ஆசிரியர்கள் - அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறையினரின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமையை எதிர்த்து, நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 2,50,000 ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். 10,110 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இதில் இணைந்துகொள்ளவுள்ளனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
ஏற்கனவே, ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவேனா ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடனடியாகத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.