வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு முறையற்ற நிர்வாகமே காரணம்: தீபன் திலீசன்
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் ஒரு நாள் கூட பாடசாலையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடாத ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு முறையற்ற நிர்வாகமே காரணம். இலங்கை ஆசிரியர் சங்கம் ஆனது தொண்டர் ஆசிரியர் நியமனத்தை ஏற்றுக்கொண்டதில்லை.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் நியமனத்தில் உள் வாங்கும் போது பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றது.
தொண்டராசிரியர் ஆக எந்த ஒரு பாடசாலையிலும் கடமை ஆற்றாது தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவரே இவ் நியமனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்ற ஆசிரியர் சங்கம் ஒன்றின் பிரதிநிதியின் சிபாரிசின் பெயரிலே நியமனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஆகவே வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஆசிரியர் இடமாற்றங்களிலும் நியமனங்களிலும் பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆகவே ஆசிரியர் சங்கம் என்ற வகையில் இனியும் வடக்கு கல்வி அமைச்சின்
செயற்பாடுகளை வேடிக்கை பார்க்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
