மாணவரை தாக்கிய ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு
கொழும்பில் அமைந்துள்ள தேசிய பாடசாலையொன்றில் குழப்பம் செய்த மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவருக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாணவனுக்கு நட்டஈடு
அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் மேலும் 1500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த அபராதத் தொகையை செலுத்த தவறினால் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர் ஒருவர் தனது நேரத்தை விரயமாக்காது முதல் தடவையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தினால் குறைந்தளவு தண்டனை விதிக்குமாறு ஆசிரியரின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



