மாணவியை மதுபானம் அருந்த தூண்டிய ஆசிரியர் கைது
இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபானம் அருந்திய மாணவி சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி காரில் வந்து இறங்கும் போது, போதையில் நிலை தடுமாறி வந்துள்ளார். அத்துடன், காரில் இருந்த இன்னொரு நபரும் போதையில் இருந்துள்ளார்.
ஆசிரியர் கைது
இதன்போது, வீதியில் நின்றுகொண்டிருந்த குழு ஒன்று விசாரிக்கையில், போதையில் இருந்த மற்றைய நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த குழுவினர் ஆசிரியரை தாக்கியதுடன் அவரை பெல்மதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |