பரீட்சை விடைத்தாள் கசிவு! குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்
புதிய இணைப்பு
வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆசிரியர்
வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கசிந்ததாக கூறப்படும் தேர்வுத் தாள்கள் மீண்டும் தயாரிக்கப்படும் என்றும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11ஆம் வகுப்புத் தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கான விசாரணை, அநுராதபுரத்தில் உள்ள மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ், அநுராதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான அனைத்துப் தேர்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கிளீன் தையிட்டி..! 1 நாள் முன்

அட்டகாசமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வளைகாப்பு... நேரில் சென்ற நடிகர்கள் Cineulagam

உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri

ட்ரம்பால் எழுந்த பீதி... பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் லண்டனில் இருந்து வெளியேற்றம் News Lankasri

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam
