தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: பிரித்தானிய செய்தித்தளம் குற்றச்சாட்டு
சர்வதேச ரீதியில் தேயிலை கொள்வனவில் ஈடுபடும் நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களின் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு பல ஆண்டுகளாக தீர்வுகளை வழங்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட தெ குரோசர் என்ற வணிக மற்றும் மனித உரிமைகள் வள மையத்தின் செய்தித்தளத்தளம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறிப்பாக டெஸ்கோ, டெட்லி மற்றும் ட்வினிங்ஸ் போன்ற தேயிலை கொள்வனவில் ஈடுபடும் நிறுவனங்களே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற மிகப்பெரிய உற்பத்தி நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நியாயமற்ற ஊதியம் மனிதாபிமானமற்ற வாழ்க்கைத் தரம் மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வணிக மற்றும் மனித உரிமைகள் வள மையத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தப்படும் தொழிலாளர்கள்
தொழிற்சங்கங்க போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் மிரட்டப்படுவதாகவும் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை இந்தியாவை மையப்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், கென்யா மற்றும் உகாண்டா போன்ற இடங்களிலும் இந்த மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
தேயிலை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் அவற்றின் ஒளிபுகா விநியோகச் சங்கிலிகள் மற்றும் களத்தில் மேற்பார்வையின்மை காரணமாக 'தேயிலைத் தோட்டங்களில் நடைபெறும் உரிமை மீறல்களிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்டன' என்று தொழிலாளர் உரிமை ஆய்வாளரான கேட் ஜெல்லி கூறியுள்ளார்.
இந்தநிலையில் தேயிலை கொள்வனவு நிறுவனங்களில் ஒன்றான டெஸ்கோவின் பேச்சாளர் ஒருவர் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுக்களை நிவர்த்திக்க தமது விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் திருப்திகரமான ஈடுபாடு கிடைக்கவில்லையென்றால் தேயிலைத் தோட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு
தெ குரோசரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஊதிய சலுகைகள் மற்றும் இழப்பீடு தொடர்பானவையாகும். உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் தோட்ட மேலாளர்களால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மொரிசன்ஸ் நிறுவனமும் டெட்லி நிறுவனமும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளன. தங்கள் தயாரிப்புகளை உருவாக்க உதவும் ஒவ்வொருவரும் பாதுகாப்பான மற்றும் நியாயமான பணியிடங்களில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளன.
எனினும் தனித்து ஒரு நிறுவனத்தினால் இந்தப்பிரச்சினைகளை தீர்க்கமுடியாது. அனைத்து பங்குதாரர்களும் இணைந்து செயற்படவேண்டும் என குறித்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை இந்தியா, இலங்கை மற்றும் கென்யாவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று தெ குரோசர் செய்தித்தளம் சுட்டிக்காட்டிள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
