தையிட்டி விகாரை விவகாரம்: முன்னாள் எம்.பி கஜேந்திரனை வாக்கு மூலம் பெற அழைத்துள்ள பொலிசார்
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுக்கு(S. Kajendran) அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் நாளை (20.02) பகல் 12.00 மணிக்கு பலாலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்புக் கட்டளை
தனியார் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரின் துணையுடன் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றக் கோரி ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பலாலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு இவ் அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
