கொழும்பில் வரி கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஓர் அறிவிப்பு
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேச வாழ், வரி கட்டணம் செலுத்தும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும் போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டு வந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிவிப்பில் மேலும்,
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகரசபை இடமளித்திருந்தது.
அதன் பிரகாரம் அதிகளவான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.
இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது இதுவரை அதற்காக சேவை கட்டணமொன்று கொழும்பு மாநகரசபையால் அறவிடப்பட்டு வந்தது.
எனினும் தற்போது சேவைக்கட்டணத்தை அறவிடாமல் இருப்பதற்கு மாநகரசபை தீர்மானித்திருக்கின்றது.
மேலும், இதற்கு முன்னர் அறவிடப்பட்ட சேவை கட்டணமானது கொழும்பு மாநகரசபையினால் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 47 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
