இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு 550 ரூபாவுக்கு இணையான வரி விதிக்க அங்கீகாரம் வழங்குமாறு டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து டின் மீன்களுக்கான வரியினை அதிகரிக்க கோரி அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த அமைச்சரவை பத்திரத்தில், " கடந்த ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரியை அதிகரிக்குமாறு தமது தொழிற்சங்கம் விடுத்த கோரிக்கைக்கு நல்ல பதில் கிடைத்திருந்தால் அரசாங்கத்திற்கு 262 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருக்கும்.
நிறுத்தப்படும் டின்மீன் இறக்குமதி
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் இருபத்து இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் (2,055,000) டின் மீன் டின்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால், அமைச்சரவை ஆவணத்தின் அனுமதி தாமதமானால் மேலும் டின் மீன்கள் நாட்டிற்கு வரக்கூடும்.
அதேநேரம், திருகோணமலை தலைமையிலான கடற்பரப்பில் மீன்கள் முறையற்ற முறையில் அறுவடை செய்யப்படுவதனால் அங்குள்ள மீன்கள் வயதாகி அழிந்து வருவகின்றன.
நாட்டுத் தேவைக்குத் தேவையான மீன் மற்றும் டின் மீன்களை இந்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகின்ற போதிலும் இதுவரை எந்தவொரு அரசாங்கத்தினாலும் முறையான முறைமையினை நடைமுறைப்படுத்தாமை வருத்தத்திற்குரியது.
எனவே வரி விதிதிக்கும் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படும் வரை டின் மீன் இறக்குமதியை நிறுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |