பால் தேநீரின் விலை குறைப்பு
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மாவின் விலை
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam