இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறவிடுமாறு உள்ளூர் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் உணவுப் பாதுகாப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை விவசாயிகள் தொடர்ச்சியாக முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறக்குமதி பொருட்களுக்கு வரி
இதேவேளை, தற்போதும் கூட இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறவிடப்படுவதாக கூறியுள்ளார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு இருபது ரூபாவும், ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயத்திற்கு ஐம்பது ரூபாவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு பத்து ரூபாவும் வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவுப் பாதுகாப்பு குழுவிடம் விவசாயிகளின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு தற்போது குறித்த கோரிக்கையை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri