நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி - சூறையாடப்படும் மக்களின் பணம்
கடந்த வருடம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த சில வர்த்தகர்கள் 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபமீட்டியுள்ளதாக வெளிக்கொணரப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தவிசாளராக செயற்படுகின்ற வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று (01.3.2024) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஊடாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, உலர்த்தப்பட்ட நெத்திலி, மாசிக் கருவாடு, பாசிப்பயறு ஆகியவற்றின் ஊடாக சம்பாதித்த விதம் வெளிக்கொணரப்பட்டது.
2022ஆம் ஆண்டில் துறைமுகத்தில் இறக்கப்பட்ட போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 103 ரூபாவாகும்.
இது காப்புறுதி, கொள்கலன் கட்டணம், இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள் உள்ளடங்கிய விலையாகும்.
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கொழும்பு சந்தையில் 213 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 109 ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த இலாபம் 273 ரூபா வரை அதிகரித்துள்ளது.
விசேட வர்த்தக வரி
இந்த பொருட்களை விற்பனை செய்ததன் ஊடாக ஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறான இலாபத்தை பெற்றுள்ளதாக வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
துறைமுகத்தில் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விசேட வர்த்தக வரி கொள்கலன் கட்டணம் உள்ளடங்களாக ஒரு கிலோகிராமுக்கான செலவிற்கும் சந்தையில் விற்பனை விலைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை தொடர்பாக தெரிவுக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வேறுபாடு ஊடாக கிடைத்த இலாபம் 100 ரூபாவில் இருந்து 1000 ரூபா வரை காணப்படுகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam