வரி ஏய்ப்பில் ஈடுபட ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள்: அம்பலப்படுத்தும் ஐ.தே.க
நாட்டில் மக்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு சில நிறுவனங்கள் உதவி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆலோசகருமான ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரிச் செலுத்தும் ஆயிரம் கோவைகளை பார்த்தால் அவற்றுக்கு ஆலோசனை வழங்கும் பட்டயக்கணக்காய்வு நிறுவனங்களாக நாட்டில் 27 நிறுவனங்கள் இயங்கி வருவதாக கூறியுள்ளார்.
ஆலோசனை வழிகாட்டல்கள்
இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
வரியை எவ்வாறு மறைப்பது, இலாபத்தை எவ்வாறு குறைத்து காட்டுவது என்பது போன்ற விடயங்களுக்கு இந்த நிறுவனங்கள் ஆலோசனை வழங்குவதாக கூறியுள்ளார்.

இந்த 27 நிறுவனங்களே இவ்வாறு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பில் ஈடுபட ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan