நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை (15) வெளியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இன்று (14.12.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம். அரசியலமைப்பின் ஊடாக தீர்வு கண்டுள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு
கோட்டாபய ராஜபக்ச இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல, பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
ராஜபக்சர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள். தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார்.
கோட்டாபயவின் தோல்வி
அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்தார். அதனால் தான் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டத்தை சிறந்த முறையில் அடக்கினார். நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும்.
ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைக்கு துணை போக கூடாது என்பதற்காக வட் வரி மீதான வாக்கெடுப்பில் நான் கலந்துக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
