ஏர் இந்தியா விமான விபத்து! டாடா குழுமத்தின் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
அகமதாபாத்தில், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை டாடா குழுமம் ஈடு செய்யும் என்றும், அவர்களுக்கு முழு சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அறிக்கை
இது தொடர்பில் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நேரத்தில் நாங்கள் படும் துயரத்தை வார்த்தைகளால் போதுமான அளவு வெளிப்படுத்த முடியாது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
டாடா குழுமம் தனது ஆதரவு முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.ஜே.மருத்துவக் கல்லூரியில் ஒரு புதிய விடுதியைக் கட்ட உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விமான விபத்து
கற்பனை செய்ய முடியாத இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நிற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று 242 பயணிகளுடன் நேற்று(12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், பயணித்த ஒருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்துள்ளனர்.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
