எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை வழமைக்கு திரும்பும்- தாங்கி ஊர்தி சங்கம் அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் நாட்டில் எரிபொருள் விநியோகப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் எரிபொருள் தாங்கி ஊர்தி(டேங்கர் பவுஸர்) உரிமையாளர்கள் சங்கங்கள் இன்று தெரிவித்துள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு பெரும்பாலான ஊர்தி ஓட்டுனர்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் அவர்களை பணிக்கு சமூகமளிக்குமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக எரிபொருள் தாங்கி ஊர்தி சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தாங்கி ஊர்திகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்; புத்தாண்டு விடுமுறையில் சென்றுள்ளமையால், நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது
. இதேவேளை எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாக இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபன தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்
நாட்டில் இன்று எரிபொருள் விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது.
எனினும் 100 சதவீத எரிபொருள் விநியோகம் திங்கட்;கிழமை நடைபெறும் என்று எரிபொருள் தாங்கி ஊர்தி(டேங்கர் பவுஸர்) உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.



