அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 இன் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ( 23) 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
சென்னையில் பதிவான வாக்குகள்
இதற்கமைய, சென்னையில் மாலை 6 மணி நிலவரப்படி 83.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து சீல்' வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய துணை இராணுவ வீரர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் வானில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், அறைகளில் வைத்து, கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மையங்களுக்கும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு
மேலும் சிசிடிவி கமரா மூலம் தொடர்ச்சியாக அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் திகதி அன்று கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 இன் வாக்குப்பதிவு நிலவரம் கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளன.
இந்த முறை 5 முனை போட்டியில் விஜய் போன்ற புதிய சக்திகள் உள்ளதால், தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இறுதி நிலவரம் மற்றும் முடிவுகள் பல அதிரடித் திருப்பங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ஒட்டுமொத்த சர்வதேச எதிர்பார்ப்பு
இதேவேளை, மே மாதம் 4 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை வாக்கெடுப்பு பதிவாகியுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இம்முறை இடம்பெற்ற தேர்தல் பெரும் திருப்புமுணை நிறைந்த தேர்தலாக மாறுமா அல்லது திருப்புமுணை அற்ற தேர்தலாக மாறுமா என்ற மாறுப்பட்ட கருத்தும் நிலவி வருகின்றது.
அதாவது தமிழகத்தில் 80 வீதத்தின் மேல் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளமை ஆட்சிக்கு எதிரான ஒரு வாக்களிப்பு மனநிலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்த முறை 5 முனை போட்டியில் விஜய், சீமான் உள்ளிட்ட பல புதிய சக்திகள் உள்ளதால், தமிழகத்தின் அரசியல் களம் சவால்மிக்கதொரு களமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்த தேர்தல் இறுதி முடிவுகள் பல அதிரடித்திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவுகளா அல்லது வழமைப்போன்று வெளியாகவுள்ள முடிவுகளா என்பது அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச மக்களிடமும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.