பலகாரம் செய்த குடும்ப பெண் பரிதாபமாக மரணம்
மொனராகலை, சியம்பலாண்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான பெண் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில், சித்திரை புதுவருடத்திற்கு முதல் நாள் எண்ணெய் பலகாரம் பொரித்துக் கொண்டிருந்த போது, தீக்காயங்களுக்குள்ளான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏ.எம். கருணாவதி என்ற 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எண்ணெய் சட்டி
இவர் எண்ணெய் பலகாரம் பொரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எண்ணெய் சட்டி தீப்பிடித்துள்ளது.
அந்த தீ பெண்ணின் உடலில் பரவி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த அவர் உடனடியாக சியம்பலாண்டுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan