வலிகாமம் தெற்கில் வெற்றியீட்டிய தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல்
இலங்கை தமிழரசுக் கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், இன்றையதினம்(09.05.2025) யாழ் சுண்ணாகத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதி கிளையின் தலைவரும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளருமாகிய தியாகராஜா பிரகாஷ் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது.
தமிழரசு கட்சியின் வெற்றி
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 18 வட்டாரங்களின் 13 வட்டாரங்களில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியீட்டியது.
31 உறுப்பினர்களை கொண்ட இந்த பிரதேச சபையில், இலங்கை தமிழரசு கட்சி 13 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 06 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 05 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜஎனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
