இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக கே.எல்.சமீம் தெரிவு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இறக்காமம் பிரதேச சபைக்கு சுயேட்சைக்குழு கால்பந்து சின்னம் சார்பில் போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
அத்துடன் பட்டியல் நியமனத்திற்கமைய ஒரு உறுப்பினரை மேற்குறித்த சுயேட்சைக்குழு பெற்றுக்கொண்டுள்ளதுடன் 13 உறுப்பினர்களை கொண்ட இறக்காமம் பிரதேச சபை வரலாற்றில் முதன் முதலாக சபைக்கு சுயேட்சைக்குழு சார்பில் கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
மேலும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் காலத்தில் இறுதியாக இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கே.எல்.சமீம் (எல்.எல்.பி) சுமார் 4 மணித்தியாலயங்கள் தனது உரையினை மேற்கொண்டு மக்களுக்கான தெளிவான விளக்கங்களை வழங்கி இருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |